தினம் திட்டு வாங்கி அசிங்கப்படும் ஆண் குல சிங்கமா நீங்கள்? அப்போ இது உங்களுக்குத்தான். அப்பா அம்மாவோ வாத்தியாரோ,யாராவது அறிவுக்கெட்டவனே என்று திட்டினால், உடனே கோபம் கொள்ள கூடாது. அறிவுக்கெட்டவனை பிரித்து பாருங்கள், அறிவு+Get +வனே. Get என்றால் ஆங்கிலத்தில் பெற்ற என்று அர்த்தம். ஆக அதை அறிவு பெற்றவனே என பொருள் கொள்ள வேண்டும். நம்மை அதிகம் திட்டப்படும் இன்னொரு வார்த்தை விளங்காதவனே அந்த வார்த்தையையும் பிரியுங்கள், விளங்கு+ஆதவனே.அதாவது விளங்குவதில் சூரியனே என்று அர்த்தம். ஆதவன் என்றால் சூரியன். மேலும் ஆண்களை திட்டபயன்படும் இன்னொரு வார்த்தை தண்டச்சோறு அதையும் பிரிப்போம். தண்டம்+சோறு. தண்டம் என்றால் ஆங்கிலத்தில் Fine என்று அர்த்தம். Fine என்பதற்கு நல்லது என்ற அர்த்தமும் உண்டு. ஆக தண்டச்சோறு என்றால் நல்லசோறு என்று அர்த்தப்படும். ஆதலால் ஆண்களே, ஆதலால் எதையும் ரிவர்ஸாக பார்போம், ரிலாக்ஸாக இருப்போம்.
No comments:
Post a Comment