காட்டிற்குப் போன வேட்டைக்காரன் ஒரு கழுகு முட்டையைக் கண்டெடுத்தான். அதை தன் வீட்டில் அடைக்காக்கும் கோழிக்கூட்டில் வைத்தான். கொஞ்ச நாளில் குஞ்சிகள் வெளிவந்தன.கழுகுமுட்டையும் குஞ்சானது.மற்ற கோழிக்குஞ்சுகளோடு இந்த கழுகு குஞ்சும் சேர்ந்து திரிந்தது. க்யா.. க்யா என கத்தியது. அவைகள் குப்பைகளைக் கிளறி புழுப் பூச்சிகளைப் பிடித்து தின்றதைப் போலவே இதுவும்தின்றது. வருடங்கள் ஓடின. எல்லாக் குஞ்சுகளும் வளர்ந்து பெரிதாயின.கழுகுகுஞ்சுகளும் வளர்ந்து கழுகு ஆனது. ஆனால் தன்னை கழுகு என்று நினைக்காமல் கோழி என்றே நினைத்தது.ஒரு நாள் எல்லாக் கோழிகளும் குப்பைமேட்டில் மேய்ந்து கொண்டிருந்த்ன. மேகங்கள்இல்லாத நீல வானத்தில் வெகு உயரத்தில் ஒரு பறவை இறக்கைகளைலாவகமாக கன கம்பீரமாக தரையைப் பார்த்தபடி பறந்துக் கொண்டிருந்தது. இதை கவனித்த இந்த கழுகுக்கோழி "அடடா...! என்ன அழகான கம்பீரமான பறவை!மேலே பார் என்றது. பக்கத்தில் இருந்த கோழி, அதன் பெயர் கழுகு! பறவைகளின் ராஜா! அது போல் பறக்க ஆசைப்படாதே! ஒரு நாளும்பறக்க முடியாது... என்றது கேலியாகதான் யார் என்பதை உணராது தன் பிறவியையே மறந்து போன இந்த கழுகுகோழி கப்சிப் என பேசாமல் இருந்துக்கொண்டது. பின் அது ரொம்பநாள் வரையிலும் மற்றக் கோழிகளை போலவே இருந்து கடைசியில் இறந்தது.தன்னைப்பற்றி அது உணர்ந்து இருக்குமானால், அதுவும் மற்ற கழுகுகளைப் போல வானத்தில்,உயரத்தில் பறவைகளின் ராஜாவாக பறந்திருக்கலாம்.மனிதர்களிலும் ரொம்பப்பேர் இப்படித்தான் தன் திறமை உணராது சாதாரணமனிதர்களாகவே வாழ்ந்து தனக்கும், மற்றவர்களுக்கும் உபயோகமில்லாமல்வாழ்ந்து மறைகிறார்கள்...
No comments:
Post a Comment