தோழர்களே ஓர் வேண்டுகோள்.. நம் கண்முன்னே நடக்கும் அநியாயம், இதற்காக நாம் என்ன செய்ய போகிறோம்..? குறைந்த பட்சம் இந்த செய்தியை முடிந்த வரை பகிர்வோம், தவறை தட்டி கேட்போம்..!! நமக்குதான் தெருவில் இறங்கி போராடவோ, தட்டி கேட்கவோ துணிவில்லை, நேரமும் இருப்பதில்லை..!? அதற்க்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம், ஆனால் நமக்காக, நம் நலனுக்காக தனி மனிதனாக சட்டத்தின் துணையோடு போராடி வரும் 83 வயது முதியவர் திரு."டிராபிக்" ராமசாமியை, தமிழக அரசின் ஒப்புதலோடு, வீரமணி என்பவர் அளித்த பொய் புகாரின் அடிப்படையில் காவல்துறை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது. செனனை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில், போக்குவரத்துக்கு இடையூராக நின்று கொண்டு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்ததாகவும், அதை தட்டி கேட்ட தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி, தனது கார் கண்ணாடியை உடைத்ததாகவும், வீரமணி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், பிணையில் வரமுடியாதபடி 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து சமீபத்தில், அதிகாலை 4மணிக்கு திரு. டிராபிக்" ராமசாமியை கைது செய்து, விசாரணைக்கு பின் புழல் சிறையில் அடைத்துள்ளனர். நம் குடும்பத்துக்காக உழைக்கும் ஒரு 84 வயது முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தால நாம் வேடிக்கை பார்ப்போமா..? ஆனால் நம் நாட்டுக்காக, சுயநலமில்லாமல் ஊழல், அடாவடி, பொருளாதார சுரண்டல், சட்ட விதிமீறல் உள்ளிட்டவற்றை கண்டிக்கும் நமக்காக உழைக்கும் முதியவரை காவல்துறை கைது செய்துள்ளது, நாம் இதை வேடிக்கைதான் பார்க்க போகிறோமா..? குறைந்த பட்சம் நாம் இதை கண்டிக்கவாவது வேண்டாமா..? அதற்கு அடையாளமாக நாம் இந்த செய்தியை பகிர்வோம், பெரும்பாலான ஊடகங்கள் பத்திரிகைகள், இருட்டடிப்பு செய்யும் இந்தசெய்தியை அனைவருக்கும் கொண்டு செல்வோம், அதன் வழியாக நமது ஆதரவை இந்த மாமனிதருக்கு தெரிவிப்போம். இதை செய்வதின் வழியாக மக்களின் எழுட்சிக்கும், போராட்டத்திற்கும் வழிவகுப்போம். ஆள்பவர் மன்னரும் அல்ல மக்கள் அடிமைகளும் அல்ல உலக வரலாற்றில் பிரஞ்சு புரட்சி எகிப்து போராட்டம் என்று எத்தனையோ போராட்டங்கள் சாமானியர் மத்தியில் இருந்துதான் ஆரம்பமானது.
No comments:
Post a Comment