பெங்களூருவில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் பயிலும் 8 வயது சிறுமியிடம் ஒரு திருடன் உன்னுடைய அம்மா உன்னை அழைத்து வர சொன்னார் என்று கூறியுள்ளார். அப்படியென்றால் பாஸ்வேர்ட் சொல்லுங்கள் உங்களுடன் வருகிறேன் என்று அந்த சிறுமி கூறியவுடன் அந்த திருடனுக்கு ஒன்றுமே புரியவில்லை. முன் பின் தெரியாத நபர்கள் யாரையாவது அனுப்பி இவ்வாறு கூப்பிட சொன்னால் முன் கூட்டியே குழந்தைக்கு சொல்லிக் கொடுத்த பாஸ்வேர்டை வரக்கூடிய நபர் சொல்ல வேண்டும் என்று குழந்தையிடம் கூறியுள்ளதால் குழந்தையும் அவ்வாறு கேட்க பதில் சொல்ல முடியாமல் திணறிய திருடன் இறுதியில் அங்கிருந்து ஓட்டமெடுத்துள்ளான். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடம் இது போன்ற வழிமுறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும்
No comments:
Post a Comment