Thursday, October 3, 2013

Data Recovery Services

கே: சார், நான் ஒரு மருத்துவத்துறை மாணவி. அண்மையில் என்னுடைய கணினியை Format எனும் வடிவமைத்தல் செய்தேன். அதனால் கணினியின் ஆவணங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. அவற்றில் என் மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளும் பல இருந்தன. அழிந்து போன தகவல்களை மீட்டுக் கொள்ள சில கணினிக் கடைகளில் விசாரித்தேன். அவர்கள் RM750லிருந்து RM1500 வரை கேட்கிறார்கள். நான் ஒரு மாணவி. அவ்வளவு பணம் கொடுக்க முடியவில்லை. விலை மலிவாக ஏதாவது நிரலி அல்லது மென்பொருள் கிடைக்குமா. ரொம்ப அவசரம் சார். ஒரு மகளைப் போல உங்களிடம் கேட்கிறேன்.

ப: உங்கள் அவசரம் எனக்குப் புரிகிறது. எப்போதுமே கணினியைச் வடிவமைப்பு செய்வதற்கு முன்னால் அதிலுள்ள படங்கள், தகவல்கள், ஆவணங்கள் எல்லாவற்றையும் நகல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வடிவமைப்பு அல்லது Format என்றால் என்ன அர்த்தம். இருப்பதை எல்லாம் அழிப்பது அல்லது சுத்தம் செய்வது. எல்லாவற்றையும் அழித்த பிறகு, அழித்தவற்றை எல்லாம் மறுபடியும் மீட்டுக் கொள்வது என்பது நடக்கக் கூடிய காரியமா.

இருந்தாலும் கணினியைப் பொருத்த வரையில் அழித்ததை மறுபடியும் மீட்டுக் கொள்ள முடியும். வழி இருக்கிறது. கடைக்காரர்கள் அவ்வளவு பணம் கேட்கிறார்கள் என்றால் அதற்கு நிச்சயம் காரணம் இருக்கிறது. உங்களுக்கு நான் அதை இலவசமாகத் தருகிறேன்.

http://letitbit.net/download/73344.709666af4391f14fbc3a876be5dc/Wondershare.Data.Recovery.4.1.1.1.rar.html எனும் முகவரிக்குப் போய் அழித்ததை மீட்கும் நிரலியைப் பெற்றுக் கொள்ளுங்கள். கட்டணம் இல்லை. Download on slow speed என்பதைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment