Showing posts with label 2014 at 06:32AM. Show all posts
Showing posts with label 2014 at 06:32AM. Show all posts

Friday, November 7, 2014

SysKan News

எனக்கு ஒரு யோசனை தோன்றியது அதை உங்களுடன் பகிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். இன்று தமிழ் நாட்டில் நம் அரசாங்கம் மதுக்கடைகளைத் திறந்து சிறப்பாகச் செயற்படுத்திப் பல்லாயிரம் கோடிகளையும் லாபம் ஈட்டி வருகிறது. அதனால் யாருக்கு என்ன பயன்?! நம் நாட்டின் முதுகெலும்பு எனக் கருதிய விவசாயம் இன்று மிகவும் நலிவடைந்த தொழிலாக மாறி வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம் PLOT ஆக மாறி வருகிறது. இதனால் கூடிய விரைவில் நம் நாடு உணவுப் பொருட்களுக்காக மற்ற நாடுகளிடம் கை ஏந்தும் நிலை வரலாம். அதனால் நமது அரசு ஏன் விவசாயத்தை நடத்தக்கூடாது?! • ஒவ்வொரு மாவட்டதையும் அதன் தரம் வாரியாகப் பிரித்து அதற்கென ஒரு துறை அமைத்து அதனை விவசாயத் துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும். • இதில் விவசாயம் படித்த பட்டதாரிகளை மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். • விவசாய வேலை ஆட்களை அரசு வேலை போல நியமனம் செய்ய வேண்டும். • இதனை ஒரு பொது துறை நிறுவனம் போல செயல்படுத்த வேண்டும். • ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாய ஆராய்ச்சி மையம் செயல் படுத்தவேண்டும். இதன் மூலம் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்கி விவசாய்திற்குப் பயன்படுத்த வேண்டும். • இயற்கை வேளாண்மையும் செயல்படுத்த வேண்டும். இவை நடந்தால்? • நம் நாடு உணவு உற்பத்தியில் முதலிடம் பெறும் • உணவு ஏற்றுமதி அதிகரிக்கும் • விவசாயத்தை அழியாமல் பாதுகாக்க முடியும் • நாட்டில் பண வீக்கம் அரசின் கட்டுபாட்டில் இருக்கும் • வேலை இல்ல திண்டாட்டம் ஒழியும். இன்னும் பல…………………………………….. ஏன் அரசாங்கம் டாஸ்மாக் நடத்தும் போது விவசாயம் செய்ய முடியாதா?!