'பொங்கல்' என்ற சொல் தமிழில் சோறு பொங்குவதையோ பால் பொங்குவதையோ மட்டும் குறிப்பதல்ல. வளர்தல்,உயர்தல்,எழுதல்,பொலிதல்,நிறைதல்,மிகுதி,கள் என்று பல அர்த்தங்கள் கொண்டு, உள்ளும் புறமும் உற்சாகத்தைப் பொங்க வைக்கும் ஒரு சொல். மண்ணும் மனமும் நிறைந்து வழிவதைச் சொல்வது. இயற்கையின் தலைப்பிள்ளைகள் உழவர்கள். அவர்களை எல்லா சொற்களாலும் வாழ்த்துவோம்... எல்லா செயல்களாலும் உயர்த்துவோம்... அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment